Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

We will voice people’s problems in the Assembly – Says Stalin.

By   /  May 26, 2016  /  Comments Off on We will voice people’s problems in the Assembly – Says Stalin.

    Print       Email

201605261314337709_MK-Stalin-Interview-for-peoples-problems-will-be-voiced-in_SECVPFதிமுக மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் –ஸ்டாலின் பேட்டி.

பாராளுமன்ற மேல்-சபையில் தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களை தேர்வு செய்ய 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

InCorpTaxAct
Suvidha

அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், தி.மு.க. சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2 பேரும் இன்று தங்கள் வேட்பு மனுவை கோட்டையில் உள்ள சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் தாக்கல் செய்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தாயகம் கவி, கு.க.செல்வம், எஸ்.ஆர்.ராஜா, மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு ஸ்டாலின், கனிமொழி உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு இன்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவரும் மனுதாக்கல் செய்து உள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு இவ்வளவு பெரும்பான்மை இருந்ததாக வரலாறு இல்லை.

இந்த சூழ்நிலையில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய தி.மு.க. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாட்டில் என்னென்ன முக்கிய பிரச்சனை உள்ளதோ, மக்களின் தேவைகள் என்னென்ன உள்ளதோ, அதை மையமாக வைத்து தி.மு.க.வின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →