சிம்புவுக்குத் திருமணம் எப்போது? டி.ராஜேந்தர் விளக்கம்.
சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஜாதகப் பொருத்தத்துடன் கூடிய பெண்ணைத் தேடிவருகிறோம் என்று அவரது தந்தையும், லட்சிய திமுக நிறுவனத் தலைவருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியது: சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். மனப் பொருத்தம், ஜாதகப் பொருத்தத்துடன் கூடிய பெண்ணைத் தேடிவரு கிறோம். சிம்புவின் திருமணம் காதல் திருமணமாகக்கூட இருக்கலாம்.
நாங்கள் யார் என்பதைக் காட்டுவதற்காக, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ போட்டியிடு வோம்.
எம்ஜிஆர் பெயரை உச்சரித் தவர்கள் வாழ்ந்தார்கள். கருணாநிதி பெயரைச் சொல்லி யவர்கள் வீழ்ந்தார்கள். இது வரலாறு. திமுகவினர் என்னைப் பயன்படுத்திக் கொண்டு, கருவேப்பிலையாகத் தூக்கிப் போட்டுவிட்டனர்.
தமிழகத்தில் சிறிய திரைப் படத் தயாரிப்பாளர்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வரு கின்றனர். சிறிய பட்ஜெட் படங் களுக்கு மானியம் கிடைப்ப தில்லை. திரைப்பட தயாரிப் பாளர் சங்கத்தினர், இதை யெல்லாம் முதல்வரின் கவனத் துக்கு கொண்டுசெல்வதில்லை.
பெரும்பாலான திரையரங்கு களில் அதிக கட்டணம் வசூலிக் கப்படுகிறது. மேலும், உணவுப் பண்டங்கள், குடிநீர் பாட்டில் கள் அதிக விலைக்கு விற்கப் படுகின்றன. இதைத் தடுக்க யாரும் முயற்சிக்காததால், மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, திரையரங்குகளில் கட்டணத் தைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்.
மக்களின் பிரச்சினைகளுக் காக லதிமுக தொடர்ந்து போராடும். வைகோவை நம்பி, விஜயகாந்த் சென்றது தவறு. வைக்கோல்போரை நம்பிக்கூட வாழலாம். ஆனால், வைகோவை நம்பினால் வாழவே முடியாது என்றார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.