Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

What are the benefits to the state of the global investor conference? Stalin Questions in assembly

By   /  June 23, 2016  /  Comments Off on What are the benefits to the state of the global investor conference? Stalin Questions in assembly

    Print       Email

TH06_DMK_2234630fஉலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்த நன்மைகள் என்ன?: மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதும், அவரது பேச்சில் குறுக்கிட்டு அமைச்சர்கள் அளித்த பதிலும் வருமாறு;-

InCorpTaxAct
Suvidha

மு.க.ஸ்டாலின்:- வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தின் இரு பக்கங்கள். இந்த தேர்தலில் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் இருவருமே உணர்ந்திருக்கிறோம். வெளிப்படையான நிர்வாகத்தை அரசு வழங்க வேண்டும், அதை தி.மு.க. உறுதி செய்ய வேண்டும் என்ற மக்களின் முடிவுதான் இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

சிறு, குறு விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டாலும், யார் யாருக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகையையும் அதில் காட்ட வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலும் பெற்ற விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- ரூ.5ஆயிரத்து 780 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம். இணையதளத்தில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்படும்.

மு.க.ஸ்டாலின்:- பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழு அளவு பாலையும் கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும். 20 சதவீத பாலை திருப்பி அனுப்பிவிடுவதாக சம்பந்தப்பட்ட சங்கங்களில் இருந்து புகார் வருகிறது.

அமைச்சர் சண்முகநாதன்:- அனைத்து பாலையும் பால் கூட்டுறவு சங்கங்கள் பெற்றுக் கொள்கின்றன. கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் அரசு வாங்குகிறது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை. சில வியாபாரிகளுக்குத்தான் பாதிப்பு.

மு.க.ஸ்டாலின்:- எது உண்மை என்பது சம்பந்தப்பட்ட மக்களுக்குத் தெரியும். சென்னையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடிக்கு சென்றிருந்தேன். அங்கு துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணை போன்றவற்றின் விலைப்பட்டியலை 2011-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது என்று எப்படி கூறமுடியும்?

அமைச்சர் காமராஜ்:- பொது வினியோகத் திட்டத்தில் அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவை சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகங்கள், அம்மா குடிநீர், அம்மா உணவகம் போன்ற திட்டங்களும் செயல்படுகின்றன. கூட்டுறவு, அமுதம் சிறப்பங்காடிகள் மூலமாகவும் அடக்கவிலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மு.க.ஸ்டாலின்:-உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. அதன் நிலை என்ன?

அமைச்சர் சம்பத்:- 98 ஒப்பந்தங்களில் 60 ஒப்பந்தங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. 7 ஒப்பந்தங்களுக்கான திட்டங்கள் முழுமையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 48 ஆயிரத்து 148 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்:- இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள நன்மைகள் என்ன என்பது பற்றிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள் எவை? மின்சாரம் இருந்தால்தான் புதிய தொழில்கள் இங்கு வரும். கொலைக்கான கூலிப்படையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரித்து மக்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும்.

எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன்:- பள்ளிகள் தொடங்கி விட்டன. எனவே கவுன்சிலிங் எப்போது என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.

மு.க.ஸ்டாலின்:- முதல்- அமைச்சரையும் விசாரிக்கக் கூடிய அளவில் லோக் ஆயுக்தா இங்கு கொண்டு வரப்பட வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் நிதி முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. எனது தொகுதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் 60 சதவீதத்துக்கு மேல் செலவு செய்யப்படவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →