Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

What you did when you were in charge? You did nothing…….Gautam Gambhir blasts Ravi Shastri

By   /  July 1, 2016  /  Comments Off on What you did when you were in charge? You did nothing…….Gautam Gambhir blasts Ravi Shastri

    Print       Email

நீங்கள் பயிற்சியாளராக இருந்தபோது சாதித்துக் கிழித்தது என்ன? ஒன்றுமில்லை….! ரவிசாஸ்திரிக்கு காம்பிர் காட்டமான 14gautam-gambhirபதில்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் கும்ப்ளே சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

InCorpTaxAct
Suvidha

இந்திய அணியின் இயக்குனராக 18 மாதங்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் கும்ப்ளே நியமிக்கப்பட்டதால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். இதை அவர் நேரிடையாகவே தெரிவித்தார். பயிற்சியாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக ரவிசாஸ்திரி- கங்குலி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ரவிசாஸ்திரியை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து காம்பீர் கூறுகையில் ”பயிற்சியாளர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் ரவிசாஸ்திரி தனது கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கள் அவரது விரக்தியை தான் காட்டுகிறது. கும்ப்ளே மிக சிறந்த தேர்வு. அவர் மிகவும் கடினமான உழைப்பாளி ஆவார்.

தனக்கு கீழ் இந்திய அணி வெற்றிகரமாக செயல்பட்டதாக ரவிசாஸ்திரி கூறிவருகிறார். ஆனால் அவர் சொல்லாமல்விட்டது, அவர் இயக்குனராக இருந்த போதுதான் இந்தியா வங்காளதேசத்திடம் தோற்றது, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது. இரண்டு உலக கோப்பையில் விளையாடி இரண்டிலும் தோற்றது. இதில் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைப்பெற்றது.

18 மாதங்களில் இந்தியா வென்றது என்ன? ஒன்றும் இல்லை. ஒரு வெளிநாட்டு தொடரை கூட கைப்பற்றவில்லை. நீங்கள் வாய் கிழியா பேசலாம் ஆனால் அதை யாறும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்”  என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →