Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

When  will  vijayakanth  break  his  silence?

By   /  February 25, 2016  /  Comments Off on When  will  vijayakanth  break  his  silence?

    Print       Email

vijayakanthவிஜயகாந்த் எப்போது மவுனம் கலைப்பார்?

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், விஜயகாந்தும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியிலேயே இடம் பெறுவார் என்று எல்லோருமே எதிர்பார்த்தனர். அது பற்றிய அறிவிப்பை நடந்து முடிந்த காஞ்சீபுரம் தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் காத்திருந்தனர்.

InCorpTaxAct
Suvidha

ஆனால் விஜயகாந்தோ, தி.மு.க. அணியில் நிச்சயமாக சேரமாட்டோம் என்பதை மறைமுகமாக சொல்லி விட்டார். அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தாண்டி தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் விஜயகாந்தின் மனதில் ஏற்பட்டு விட்டது.

இந்த ஆசையையே அவர் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து நான் ‘கிங்’ ஆக இருக்கணுமா? கிங் மேக்கர் ஆக இருக்கணுமா? என்று அவர் தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர்கள் ‘கிங்’ ஆக இருக்க வேண்டும் என்றனர். தொண்டர்களின் இந்த விருப்பத்துக்கு ஏற்ப விஜயகாந்தும் கிங் (முதல்–அமைச்சர்) ஆகும் எண்ணத்துடனேயே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் இந்த எண்ணத்தை பா.ஜனதா தலைமையும் புரிந்து கொண்டுள்ளது. கூட்டணிக்கு தலைமை தாங்கச் செய்து முதல்–அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கவும் தயங்க மாட்டோம் என்பது போலவே பா.ஜனதா தலைவர்களின் கருத்துக்கள் உள்ளன.

அதே நேரத்தில் விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை ‘கிங்’ ஆக்குவது பற்றி பரிசீலிக்கவும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தயாராக இருப்பது போலவே தெரிகிறது. எனவே பா.ஜனதா கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமை தாங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் தொண்டர்களிடம் கருத்து கேட்ட விஜயகாந்த், கடந்த 22–ந் தேதியில் இருந்து மாவட்டங்கள் வாரியாக வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறார். மார்ச் 1–ந் தேதியுடன் நேர்காணல் முடிகிறது.

இந்த நேர்காணலின்போது வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களிடம் “நாம் யாருடன் கூட்டணி வைக்கலாம்?” என்று விஜயகாந்த் கேட்பதாகவும், இந்தக் கேள்விக்கு 90 சதவிகிதத்தினர் “திமுகவுடன் கூட்டணி வைக்கலாம்” என்று பதில் சொன்னதாகவும் தகவல்கள் வருகின்றன. இதில் வெறுத்துப்போன விஜயகாந்த் தொடர்ந்து “நான் முதலமைச்சராக வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க அந்தக் கேள்விக்கு பலர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் அவர் ஆழ்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படி முடிவை எடுப்பாரா அல்லது அவர் என்ன நினைக்கிறாரோ அதற்கேற்ப முடிவெடுப்பாரா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →