Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Which  sector employees paid more salary in India?

By   /  February 16, 2016  /  Comments Off on Which  sector employees paid more salary in India?

    Print       Email

FreshDesk-officeஎந்தத் துறை ஊழியர்கள் இந்தியாவில் அதிக சம்பளம் பெறுகிறார்கள்?

எம்.எஸ்.ஐ. எனப்படும், மான்ஸ்டர் ஊதியக் குறியீடு அமைப்பு, இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளம் தொடர்பான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இந்த ஆய்வின் படி இந்தியாவில், தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகபட்சமாக, மணிக்கு, 346 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள பி.எப்.எஸ்.ஐ., எனப்படும் வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறையில், சராசரியாக, மணிக்கு 300.23 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

இந்தியாவிலேயே அதிகபட்ச சம்பளம் கிடைத்தாலும், இந்த இரு துறைகளைச் சேர்ந்த 50 சதவீதத்திற்கு அதிகமான ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் போதவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உற்பத்தி துறையில் வேலைப்பார்க்கும் ஊழியர்கள் தான் குறைந்த அளவு சம்பளம் வாங்குகிறார்கள். உற்பத்தி துறையில் சராசரியாக மணிக்கு 254 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு மணிநேர சராசரி சம்பளமான 279 ரூபாயை விட 9 சதவீதம் குறைவாகும்.

இந்த துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவருக்கு கூட, உற்பத்தித் துறையில், அதிகபட்சம், மணிக்கு, 260 ரூபாய் சம்பளமே தரப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை விட, இரு மடங்கு சம்பளம் தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →