Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Who is no 1 among actress? ……….. It is Nayanthara

By   /  April 23, 2016  /  Comments Off on Who is no 1 among actress? ……….. It is Nayanthara

    Print       Email

தென் இந்திய நடிகைகளில் முதல் இடம் யாருக்கு? நயன்தாரா முதல் இடத்தைப் பிடித்தார்.nayantara630

சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தென்இந்திய நடிகைகளில் யாருக்கு முதல் இடம் என்ற கருத்துக் கணிப்பை ரசிகர்களிடம் நடத்தியது. இதில் நயன்தாரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 2013ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்திய நடிகைகளில் 7ம் இடத்தில் இருந்த நயன்தாரா இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறார். அவரது அழகு திறமை நடிப்பு அனைத்தையும் விரும்புவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

திரைஉலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைப்பவர்கள் எல்லாரும் வெற்றிபெறுவதில்லை. ஹீரோயின் ஆனவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒருசில ஆண்டுகளில் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுவார்கள்.இந்த வரம்புகள் அனைத்தையும் உடைத்து எறிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தமிழ்ப் படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு மலையாளத்திலும் முன்னணி நடிகை ஆனார். நயன்தாரா நடித்தால் அந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று திரைஉலகினர் இவரைச் சுற்றிவரும் நிலை இப்போது உள்ளது. இப்போதைய கருத்துக் கணிப்பிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

2வது இடம் சுருதி ஹாசனுக்குக் கிடைத்திருக்கிறது. 3வது இடத்தை எமி ஜாக்சனும், நான்காவது ஐந்தாவது இடங்களை முறையே அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் பெற்றிருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடங்களில் திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட மற்ற நாயகிகள் இருக்கிறார்கள்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →