Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

why can’t the Govt telecast Assembly proceedings ?– High court asks TN govt.

By   /  August 9, 2016  /  Comments Off on why can’t the Govt telecast Assembly proceedings ?– High court asks TN govt.

    Print       Email

Madras-High-Court-in-Chennai-Milei.vencel-wikimediaதமிழக சட்டசபை நிகழ்வுகளை ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி.

தமிழக சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்களுக்கு தெரிந்துக் கொள்ளும் விதமாக தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘பாராளுமன்றத்தில் நடைபெறும் முக்கிய விவாதங்கள் பொது மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ராஜ்யசபாவிலும் விவாதங்கள் இதுபோல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பல மாநிலங்களில் இந்த வசதி உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக சட்டசபையின் நிகழ்வுகள் ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எலிசபத் சேஷாத்திரி, ‘இந்த நேரடி ஒளிபரப்புக்கு பெரும் தொகை செலவாகும் என்று தமிழக அரசு கூறலாம்.

ஆனால், அண்டை மாநிலமாக கேரளாவில், சட்டசபை நிகழ்வுகள் தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) மூலம் இலவசமாக இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அந்த முறையை தமிழக அரசு பின்பற்றலாம்’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →