நாராயணசாமியை புதுச்சேரி முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் தேர்வுசெய்ய காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலத் தேர்தலை நமச்சிவாயம் தலைமையில்தான் காங்கிரஸ் –திமுக கூட்டணி சந்தித்தது. 17 தொகுதிகளை இக்கூட்டணி பெற்றதும் நமச்சிவாயம்தான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்தது. காங்கிரஸ் கட்சியிலும் அதே சிந்தனைதான் இருந்தது. ஆனால் கிரண்பேடியை அந்த மாநில லெப்டினண்ட்கவர்னராக திடீரென்று டெல்லியில் ஆளும் பாஜக அறிவித்தது. இந்த அறிவிப்பின் பின்னணியில் ஏதாவது அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் காங்கிரஸூக்கு வந்தது. அப்படி ஏதாவது அரசியல் சித்துவிளையாட்டுகள் அரங்கேற்றப்படுமானால் அதனைச் சமாளிக்க நமச்சிவாயத்தை விடவும் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற நாராயணசாமிதான் தகுதியானவர் என்பதனால்தான் நமச்சிவாயத்திற்குப் போகவிருந்த முதலமைச்சர் நாற்காலி நாராயணசாமிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் என்று ஒரு தகவல் டெல்லி வட்டாரத்தில் உலவுகிறது. இந்த நிலையில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார்.
கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி 17 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கிற வாய்ப்பை புதுவை மாநில மக்கள் எங்களுக்கு கொடுத் திருக்கிறார்கள்.
நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் முன்மொழிய சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் வைத்தியலிங்கம் வழிமொழிய ஏகமனதாக நான் புதுவை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டேன்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆசியோடும் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆசியோடும் நான் புதுவை மாநில காங் கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய் யப்பட்டுள்ளேன். இங்கு மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்து நன்றி கூறி ஆசி பெற்றுள்ளேன்.
காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி புதுச்சேரி மாநி லத்தில் சிறப்பான ஆட்சியை தருவதற்கு அனைத்து நட வடிக்கைகளையும் எடுப் போம். புதுச்சேரி மாநிலத்தில் நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து முன் மாதிரி மாநிலமாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி நடக்கிறது. அப்படி இருந்தாலும் புதுவை மாநில மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட்டு நல்ல திட்டங்களை கொண்டு வரவும், வேலை வாய்ப்புகள் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
கேள்வி:– புதுவை மாநிலத்தில் ஆட்சி அமைக்கிற உரிமையை எப்போது கோரப்போகிறீர்கள்?
பதில்:– இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆதரவு கடிதம் பெற்றுள்ளோம். அந்த கடிதத்தை துணை நிலை ஆளுனரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோருவோம்.
புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரேதசமாக உள்ளதால் இந்த ஆதரவு கடிதத்தை கவர்னர் உள்துறை அமைச்சருக்கு அனுப்பி அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று பின்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.
கேள்வி:– அமைச்சரவையில் நமச்சிவாயத்துக்கு பதவி வழங்கப்படுமா?
பதில்:– காங்கிரசில் யார்– யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் முடிவு செய்து அறிவிப்பார்.
கேள்வி:– உங்கள் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால் புதுவை அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற வாய்ப்பு உள்ளதா?
பதில்:– இது சம்பந்தமாக எங்கள் கட்சி தலைவரும், தி.மு.க. தலைவர் கருணா நிதியும் கலந்து பேசி முடிவு செய்வார்கள்.
கேள்வி:– நீங்கள் எந்த தொகுதியில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடப்போகிறீர்கள்?
பதில்:– அது சம்பந்தமாக எங்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் கலந்து பேசி முடிவு செய்வோம்.
கேள்வி:– நேற்று புதுவை மாநிலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததே?
பதில்:– அந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டது. சில முடிவுகள் எடுக்கும் போது சிறு சிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. சுமூக மாக தீர்க்கப்பட்ட பிரச்சினைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.