‘தேசிய விருதைப் புறக்கணித்தது ஏன்?’ தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கியதைப் புறகணித்தது பற்றி இளையராஜா விளக்கம்.
‘’தேசிய விருதை இரண்டாகப்பிரித்து வழங்குவது முறையானதல்ல’’ என்று கூறி தேசிய விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
நியூடெல்லியில் செவ்வாயன்று 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவி த்தார். இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசியவிருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை.
‘’2010 வரை சிறந்த இசையமைப்புக்காக ஒரேயொரு தேசியவிருது வழங்கப்பட்டுவந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ண வீணா என மூன்றுபடங்களுக்கு நான் தேசிய விருது பெற்றுள்ளேன். ஆனால் இம்முறை சிறந்த பின்னணி இசைக்காக மட்டும் எனக்கு விருது வழங்குவது என்னை பாதிமட்டுமே அங்கீகரிப்பதாகும். எனது இசையில் ஒரு பாதி மட்டுமே சிறப்பாக உள்ளது எனச்சொல்வதாகும்’’ என்று சொல்லும் இளையராஜா, இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த விருந்து வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
மேலும், விருதை இரண்டாக பிரித்து வழங்குவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.