Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Will Jayalalitha’s properties be auctioned?

By   /  March 16, 2017  /  Comments Off on Will Jayalalitha’s properties be auctioned?

    Print       Email

04-1462360491-acharya-jayaஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படுமா? சட்டத்துறை நிபுணர்கள் கருத்து.

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. கர்நாடக ஐகோர்ட்டு குற்றவாளிகளுக்கு அளித்த விடுதலையை ரத்து செய்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில் ஜெயலலிதா தான் பிரதான குற்றவாளி. ஆனால் வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் அவர் இறந்து விட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறார் என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி விட்டதால் ரூ.100 கோடி அபராதம் செலுத்தப்படுமா? எவ்வளவு நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவா? சொத்துக்கள் எப்போது பறிமுதல் செய்யப்படும்? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக கர்நாடகா மூத்த வக்கீல் ஆச்சார்யா கூறியதாவது:-

ஜெயலலிதா இறந்து விட்டதால் சிறை தண்டனையில் இருந்து இயற்கையாக விலக்கு பெற்றுள்ளார். ஆனால் அபராதத்துக்கு விலக்கு பெற முடியாது. ஏனென்றால் அதை வசூலிக்கும் சாத்தியங்கள் நிரந்தரமானவை. நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் அதை வசூலிக்கும் முறைகள் என்ன என்பதையும் மிக தெளிவாக விளக்கியுள்ளார். அதன்படி அந்த தொகை வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகா அரசின் சட்டத்துறை அதிகாரி கூறியதாவது:-

தண்டனை பெற்றவர்களிடம் அபராதம் நிச்சயமாக வசூல் செய்யப்படும். அவர்கள் பெயரில் உள்ள டெபாசிட் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம், நகைகளையும் ஏலம் விடலாம்.

குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மே 14-ந்தேதி கடைசிநாள். இந்த 3 மாத கால அவகாசத்துக்குள் அவர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்து விட்டால் இந்த வழக்கு இன்னும் தொடரும். அந்த சூழ்நிலையில் நாங்கள் அபராதம் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள இயலாது.

ஒரு வேளை 90 நாட்களுக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்றால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அபராத வசூல் மற்றும் சொத்து பறிமுதல் நடவடிக்கைகளை தொடங்கி விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

6E3BB5AB-9D60-4349-A352-F4A4D34F0B32_L_styvpfசுந்தர்பிச்சை முத்து (பெங்களூர் சிறப்பு நீதிமன்ற அதிகாரி):-

பொதுவாக குற்றவாளிகள் அபராதத்தை தனிபட்ட முறையில் கோர்ட்டில் செலுத்தலாம். இல்லையென்றால் சிறையில் செலுத்தலாம். ஆனால் இதில் நீதிமன்றம் தெளிவான வசூல் முறைகளை கொடுத்து விட்டது. அது போதவில்லை என்றால்தான் குற்றவாளிகள் தனியாக அபராத தொகையை செலுத்த வேண்டி வரும். அதுவும் கூட அவர்கள் செலுத்த தேவையில்லை.

அவர்களது பெயரில் உள்ள மற்ற சொத்துக்களை வருவாய் மீட்பு சட்டம் மூலம் அரசே பறிமுதல் செய்து செலுத்திவிடும்.

சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. அதுபோல போயஸ் கார்டன் வீட்டில் கீழ்தளம் வழக்கில் இணைக்கப்படவில்லை. ஆனால் அதன் பிறகு கட்டப்பட்ட மேல்தளம், மற்றும் போயஸ் கார்டன் வீடு அருகே கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் ஆகியவை இந்த வழக்கில் உள்ளன.

அதனால் அவற்றை எப்படி ஏலம் விடுவது என்பதை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஒரு வேளை ஜெயலலிதா குடும்பத்தினரோ அ.தி.மு.க.வோ அரசு நிர்ணயிக்கும் விலையை செலுத்தி அதை வாங்கி கொள்ளலாம்.

அல்லது அரசு மொத்தமாக ஏலத்தில் விட்டு அதில் ஆரம்பகாலத்தில் இருந்த ஜெயலலிதாவின் வீட்டுக்கான மதிப்பை மட்டும் ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் ஒப்படைக்கலாம். கொடநாடு உள்ளிட்ட மற்ற சொத்துக்கள் அரசால் அப்படியே பறிமுதல் செய்யப்பட்டு விடும்.

சரவணன் (தி.மு.க. சார்பில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வக்கீல்களில் ஒருவர்):-

நீதிபதி குன்ஹா ‘‘அரசு பதவியை வைத்து ஜெயலலிதா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அதனால் அந்த சொத்துக்கள் அரசாங்கத்துக்கே போக வேண்டும். அதனால்தான் ரூ.100 கோடி அபராதம் விதிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவற்றை குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என்றே அவர் சொல்லவில்லை. ‘‘குற்றவாளிகளிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்பது தான் குன்ஹா தீர்ப்பின் சாரம்சம். ஆனால் அரசே இதை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →