Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Will Mitchell Stark break Saqlain Mustaq record?

By   /  June 26, 2016  /  Comments Off on Will Mitchell Stark break Saqlain Mustaq record?

    Print       Email

Saqlain_Mushtaq_590541இன்றைய போட்டியில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி சக்லைன் முஸ்டாக் சாதனையை முறியடிப்பாரா மிட்செல்?

வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தென்அப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸதிரேலியா அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இதில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகள் பலப்ரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 46 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

இந்த தொடரில் 6 லீக் போட்டிகளில் நான்கில் பங்கேற்றார். இந்த நான்கு போட்டிகளிலும் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதனால் அவர் 50 போட்டிகளில் 98 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் 51 போட்டியில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தி 15starcமிகக்குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை பட்டியலில் உள்ளார். நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் 54 போட்டிகளிலும், பிரெட் லீ 55 போட்டிகளிலும், இம்ரான் தஹிர் 58 போட்டிகளிலும், வக்கார் யூனிஸ் 59 போட்டிகளிலும் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →