Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Will  Rangaswamy  again  capture  power in  Pondicherry?

By   /  March 29, 2016  /  Comments Off on Will  Rangaswamy  again  capture  power in  Pondicherry?

    Print       Email

புதுவையில் ரங்கசாமி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா?RANGASAMY_1773540f

புதுவையில் கடந்த கால வரலாற்றில் பல தலைவர்கள் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வந்துள்ளனர். அவர்கள் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால் ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார்.

InCorpTaxAct
Suvidha

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை எம்.எல்.ஏ. ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்தது.

இந்த தடவை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்கி 2–வது முறையாக தேர்தலை சந்திக்கிறது. இப்போதும் அந்த கட்சி ஆட்சியை பிடிக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாரதீயஜனதா கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டது. இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதன் மூலம் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து செல்வாக்குடன் இருப்பதை அந்த கட்சி நிரூபித்து காட்டியது.

அதேபோல இந்த சட்டசபை தேர்தலிலும் செல்வாக்கை நிரூபித்து காட்டுமா? என்பது தான் இப்போதைய கேள்வி?

ரங்கசாமி ஆட்சி மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அவர் எப்படி தேர்தல் வியூகத்தை வகுக்க போகிறார் என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி அமையும்.

கடந்த தேர்தலில் அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தார். ஆனால் இப்போது அ.தி.மு.க. தனித்து போட்டியிட முயற்சித்து வருகிறது. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் என்.ஆர். காங்கிரசார் வெற்றி பெறமுடியுமா? என்று தெரியவில்லை.

எதிரணியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்றால் என்.ஆர். காங்கிரசும் வலுவான கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும். அதை ரங்கசாமி எப்படி செய்ய போகிறார் என்று தெரியவில்லை.இதுவரை அவர் கூட்டணி குறித்து எந்தஅறிவிப்பும் வெளியிடவில்லை.

அ.தி.மு.க.வுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக முதலில் கூறப்பட்டது. இடையில் பேச்சுவார்த்தை நின்றுவிட்டது.

புதுவையை பொறுத்தவரை வேறு எந்த வலுவான கட்சியும் இல்லை. மக்கள் நலக்கூட்டணியுடன் ரங்கசாமி கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அதுபெரிய அளவில் பலன் தருமா? என்று தெரியவில்லை.

ரங்கசாமி 3 முறை முதல்–அமைச்சராக இருந்துள்ளார். புதுவையில் நீண்ட காலம் முதல்–அமைச்சராக இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 10½ ஆண்டு காலம் இந்த பதவியில் இருந்துள்ளார்.

காமராஜரால் ஈர்க்கப்பட்டு ரங்கசாமி அரசியலுக்கு வந்தார். முதலில் காங்கிரஸ் கட்சி, பின்னர் ஜனதா தளம் கட்சி ஆகியவற்றில் அவர் பணியாற்றினார். 1990–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலாக அவர் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டார். அதில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

1991 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடந்த 4 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தார். அதில் அந்த கட்சி ஆட்சியை பிடித்தது.

ரங்கசாமி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். புதுவையில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த சமுதாயத்தில் முதன் முதலில் முதல்–அமைச்சர் ஆனவர் என்ற பெருமை ரங்கசாமிக்கு உண்டு.

அரசியலில் சாதுரியமாக காயை நகர்த்துவதில் ரங்கசாமி திறமையானவர். கடந்த சட்டசபை தேர்தலிலும்,அதன்பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு அவருடைய அரசியல் ராஜதந்திரமே காரணமாக இருந்தது. எனவே இந்த தேர்லிலும் அவருடைய ராஜதந்திரம் எடுபடுமா? என்பது போக போகத்தான் தெரியவரும்.

ஜோதிடத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர். எல்லாவற்றையும் ஜோதிடம் பார்த்தே செய்வது அவருடைய வழக்கம். இப்போதும் ஒவ்வொரு விஷயத்திலும் ஜோதிடத்தின் அடிப்படியிலேயே அடியெடுத்து வைக்கிறார். பல்வேறு கோவில்களுக்கும் சென்று வருகிறார். இது உரிய பலனை கொடுக்கும், மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →