விம்பிள்டன் டென்னிஸ் 2016: சாம் குயரியிடம் உலகின் முதல்நிலை வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , 28-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் சாம் குயரியுடன் மோதினார்.
இரண்டு மணி நேரம் 57 நிமிடங்கள் வரை நீடித்த இந்தப் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தொடக்கம் முதலே சாம் குயரி ஆதிக்கம் செலுத்தி வந்தார். முதல் சுற்றை 7-6 என்ற கணக்கில் வென்றார். பின்பு இரண்டாவது சுற்றில் அதிரடியாக விளையாடி 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றார்.
மூன்றாவது சுற்றில் 3-6 என்ற கணக்கில் இழந்தாலும், 4-வது சுற்றில் 7-6 என்ற கணக்கில் வென்றார்.
முன்னதாக கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் ஆன பிறகு, 1969-க்கு பிறகு நான்கு வகையான கிராம் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், கிராம் ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக 30 போட்டிகளில் வென்ற அவரது வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
-ரயன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.