Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Winning or loosing is not our agenda. We will win one day’ – says Seeman,who’s Party contesting in all 234 constituencies

By   /  May 14, 2016  /  Comments Off on ‘Winning or loosing is not our agenda. We will win one day’ – says Seeman,who’s Party contesting in all 234 constituencies

    Print       Email

‘ஒருநாள் நிச்சயம் அரசியலை மாற்றிக்காட்டுவோம்’- 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சீமான் பேட்டி.seeman

மே 16–ந் தேதிக்கான சட்டசபை தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.கவுக்கு போட்டியாக மற்ற கட்சிகள் அனைத்தும் அணி திரண்டுள்ளன.

InCorpTaxAct
Suvidha

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கிய பா.ஜனதா கட்சியால், பெரிதாக சாதித்துக்காட்ட முடியவில்லை. இதனால் சிறிய கட்சிகளை மட்டுமே பெயரளவுக்கு கூட்டணி சேர்த்துக் கொண்டு பாரதிய ஜனதா கட்சியும் தனியாகவே தவித்து வருகிறது.

இப்படி மாற்று அரசியலை முன்னிறுத்தி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு களம் காணும் நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியும், வெற்றி – தோல்வியை பற்றி கவலைப்படாமல் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. “எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே…”, “நாமே மாற்று…. நாம் தமிழரே மாற்று”, “இங்கு வாழும் உரிமை எவருக்கும் உண்டு” ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு.

வந்தவரை எல்லாம் வாழவைப்போம். அது எமது இனத்தின் பெருமை – இனி எம் சொந்தவரை மட்டுமே ஆளவைப்போம். இது எமது இனத்தின் அடிப்படை அரசியல் உரிமை என்கிற கோஷத்தை முன்னெடுத்து…. 234 தொகுதிகளிலும் சீமானின் கட்சி களம் காண்கிறது. எந்த கட்சிகளையும் எதிர்பார்க்காமல் தேர்தலுக்கு சில மாதங்கள் இருந்த நிலையிலேயே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை படிப்படியாக அறிவித்தார் சீமான்.

அவரது இந்த செயல்பாட்டை எண்ணி நகையாடியவர்களும் உண்டு. அதே நேரத்தில், இவ்வளவு போட்டிகளுக்கு இடையே சீமான் தனித்து போட்டியிட்டு எதனை சாதிக்கப்போகிறார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சீமானின் தனிவழிப்பயணம் தொடங்கியது.

‘‘பாதையை தேடாதே… உருவாக்கு’’ என்பது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாக்கு.

இதையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடைபிடித்து கட்சியினருக்கும் வழிகாட்டுகிறார்.

இயற்கை வேளாண்மை…. வேளாண்பணியும், ஆடு மாடுகள் மேய்ப்பதும் அரசுப் பணியாக்கப்படும் என்பது உள்ளிட்ட சீமானின் தேர்தல் அறிக்கை, பேஸ்புக், வாட்ஸ்–அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் கேலி கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது.

சீமானின் பேச்சுக்கள் நாம் தமிழர் கட்சி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்–அப் குழுக்கள் மூலமாகவும் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கூறுகிறார்கள்.

அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு அடிபோட்ட நிலையில் தனித்து போட்டியிடும் இந்த முடிவை நாம் தமிழர் கட்சி எடுத்தது ஏன்? இப்போதுள்ள அரசியல் சூழலில் நீங்கள் கூறும் மாற்றம் சாத்திம்தானா? என்பது பற்றி சீமானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–

இன்று தமிழர்கள் உணர்வை இழந்து மண்ணின் வளத்தை இழந்து வெறுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் வலிமையை பெறாமல் இதனை மாற்ற முடியாது. எனவே அதற்கான தமிழர் அரசை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கிறார்கள். முடியும் என்று நினைத்தால் எல்லாம் முடியும். நாம் தமிழர் கட்சியால் நிச்சயம் இந்த அரசியலை மாற்றிக் காட்ட முடியும். 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் 2 கட்சிகளும் வீழும் நேரம் வந்துவிட்டது.

அதே நேரத்தில் ஒரே அடியில் சாய்க்கவும் முடியாது. ஆனால் அதனை நிச்சயமாக செய்து காட்டுவோம்.

மாற்றம் என்பது மானுட தத்துவம். நிச்சயமாக தமிழகத்தின் அரசியலை மாற்றியே தீருவோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →