Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Without need they have expelled us – Says Stalin.

By   /  August 17, 2016  /  Comments Off on Without need they have expelled us – Says Stalin.

    Print       Email

Stalin_final_2975337gஎங்களைத் திட்டமிட்டே வெளியேற்றினர். காரணமில்லாமலேயே சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர் – ஸ்டாலின் கூறுகிறார்.

சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் வெளியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

InCorpTaxAct
Suvidha

கடந்த சில தினங்களாகவே சபாநாயகர் பேசும் போது நாங்கள் ஏதோ திட்டமிட்டு சபையை நடத்த விடாமல் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் கூறி வருகிறார். இடையிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேவை இல்லாத வி‌ஷயங்களை பேசுகிறார்கள்.

அதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நேற்று கூட நான் பேசும் போது இது போன்ற சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளேன்.

ஆனாலும் தேவை இல்லாமல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆத்திரப்படும்படி அ.தி.மு.க.வினர் பேசுகிறார்கள். இன்று பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ‘‘நமக்கு நாமே’’ என்று சொல்லிக் கொண்டு ஊர்-ஊராக திரிவதாக ஒருமையில் பேசியுள்ளார்.

அப்போது நான் சபையில் இல்லை. நான் சபைக்குள் சென்றதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க கேட்டேன்.

ஆனால் சபாநாயகர் மறுத்துவிட்டார். தேவை இல்லாமல் பிரச்சினையை கிளப்பி எங்களை வெளிற்றி விட்டனர்.

அ.தி.மு.க. பொதுக் குழுவில் முதல்வர் நமக்கு நாமே பயணம் பற்றி பேசியதை நான் கூறியதும் அதை சபாநாயகர் உடனே நீக்கி விட்டார். உடனே நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியதையும் நீக்குங்கள் என்றேன்.

அதை சபாநாயகர் ஏற்கவில்லை. நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டுதான் குரல் எழுப்பினோம். முறையிட்டோம். தொடர்ந்து ஜனநாயக கடமையாற்ற தயாராக இருந்தோம். ஆனால் சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டுவிட்டார்.

முதல்-அமைச்சர் இன்று கோட்டைக்கு வந்திருந்தார். ஆனால் சபைக்குள் வரவில்லை.

அடுத்த வாரம் காவல் துறை மானியக் கோரிக்கை வருவதால் அதில் நாங்கள் பங்கேற்க கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தலைவரிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →