Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Women Marching to Shani Temple Stopped. Detained Say Black Day For Democracy

By   /  January 27, 2016  /  Comments Off on Women Marching to Shani Temple Stopped. Detained Say Black Day For Democracy

    Print       Email

50730887மராட்டிய மாநிலத்தில் 400 ஆண்டு தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள்; போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் சனி பகவானுக்கு சிங்னாபூர் என்னும் இடத்திலு கோவில் உள்ளது. இங்கு பெண்கள் நுழைவதற்கு கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடை உள்ளது. தடையை நீக்கவேண்டும் என்று பூமாதா என்ற பெண்கள் அமைப்பு போராடி வருகிறது.

InCorpTaxAct
Suvidha

சிங்னாபூர் கோவில் விசேஷத்தையொட்டி பெண்களும் வழிபடுவதற்கு வருவோம் என்று பூமாதா அமைப்பைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சம்பந்தப்பட்ட தினத்தன்று போலீசார் எங்களைத் தடுத்தால் நாங்கள் ஹெலிகாப்டர் மூலம் கயிறுகட்டி இறங்கி கோவிலுக்குள் நுழைவோம் என்று அறிவித்திருந்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் கோவிலைச் சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டர் நிறுவனமொன்றில் ஹெலிகாப்டர் ஒன்றையும் அவர்கள் வாடகைக்கு அமர்த்தியிருந்தனர் என்ற தகவல் பதட்டத்தை மேலும் அதிகரித்தது.

சம்பவ தினத்தன்று பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்ற பதாகைகளுடன் 350க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்தி தேசாய் தலைமையில் கூடி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். “கோவிலுக்குள் நுழையவிடாமல் எங்களைத் தடுத்து நிறுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எங்களைத் தடுத்தது ஏன் என்பதை முதல்மந்திரி விளக்கவேண்டும்” என்று ஆவேசமாகக் கூறினார் திருப்தி தேசாய்.

வெகுநேரம் சாலையில் அமர்ந்தும் படுத்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அத்தனைப் பேரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →