Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

World Earth Day celebration : Actor Shiva Kumar paints murals in Central station.

By   /  April 25, 2016  /  Comments Off on World Earth Day celebration : Actor Shiva Kumar paints murals in Central station.

    Print       Email

13087318_1055147971224322_7738075771530144470_nஉலகப் புவிதினம் கொண்டாட்டம்; சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுவர் ஓவியம் தீட்டினார் நடிகர் சிவகுமார்.

உலக புவி தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே, அகரம் அறக்கட்டளையின் யாதும் ஊரே மற்றும் நாக கூடல் பூவிதம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகு படுத்தும் பணியில் ஈடுபட்டன.

InCorpTaxAct
Suvidha

சென்ட்ரல் ரயில் நிலைய ஒன்றாவது மேடையில் உள்ள சுவரில் 500 அடி நீளத்துக்கு ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகரும் ஓவியருமான சிவகுமார் தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் மோகன்ராஜா, ரயில்நிலைய மேலாளர் உமா சங்கர். ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் சஞ்சய்யா ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நடிகர் சிவகுமார் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் ரயில் நிலைய சுவர்களில் ஓவியங்கள் வரைந்தனர். 13082732_1055148014557651_5642144162945332626_nசென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவரான சிவகுமார் சில ஓவியங்களை வரைந்தார். அதுபற்றி அவர் குறிப்பிடும்பொழுது “கொளுத்தும் வெயிலில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஓவியங்கள் வரைந்தேன்” என்று குறிப்பிட்டார். அவருடைய மகள் பிருந்தா சிவகுமாருக்கு ஓவியங்கள் வரைய உதவிகள் செய்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →