இந்தோனேஷியாவை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்
இந்தோனேஷியாவின் சோலோ மாகாணம் மத்திய ஜாவானீசை சேர்ந்த சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, பா கோத்தோ 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் உலகின் மிக வயதான மனிதாராக கருதப்பட்டு வந்தார்.
இந்நிலையில், உடல்நிலை கோளாறினால், ஏப்ரல் மாதம் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 146 வயதான சோடிமெட்ஜோ தனது கிராமத்தில் மரணமடைந்துள்ளார். ஆனால், இந்தோனேசியாவில் 1900-ம் ஆண்டில்தான் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உறுதிபடுத்தப்பட்ட ஆவணங்களின் படி பார்த்தால் 122 வயதில் இறந்த பிரான்சு நாட்டின் ஜீன் கால்மெண்ட்தான் உலகின் நீண்ட காலம் வாழ்ந்த மனிதராக இருந்திருக்கிறார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.