Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Yet  no  decision  about  alliance  central  minister  feels  still  there  is  time

By   /  February 12, 2016  /  Comments Off on Yet  no  decision  about  alliance  central  minister  feels  still  there  is  time

    Print       Email

 

கூட்டணி குறித்து தக்க சமயத்தில் முடிவெடுப்போம் – பொன் ராதாகிருஷ்ணன்.wz9CjGfz

InCorpTaxAct
Suvidha

தஞ்சைக்கு திருமணவிழாவில் கலந்துகொள்ள வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா கூட்டணி குறித்து தலைமையில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. மற்ற எந்த கட்சியும் கூட்டணி குறித்து முழுமையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. பா.ஜனதா அரசியல் சூழ்நிலைகளை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து தகுந்த நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனார். பல்வேறு பத்திரிக்கைகளில் ஒருவரே பல அடையாள அட்டைகள் வைத்துள்ளது குறித்து செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு போலியான வாக்காளர் கூட சேர்க்கப்படவில்லை என உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டும் அல்ல பலர் ஏற்கனவே உள்ள வாக்களிக்கும் இடத்தில் இருந்து முகவரி மாற்றப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளனர். அது சரிசெய்யப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. இது வரவேற்கப்படக்கூடிய விஷயம். இது வெறும் வாக்குறுதியாக இல்லாமல், உறுதியான நடவடிக்கை எடுக்க கூடிய வாக்குறுதியாக அமைய வேண்டும்.

கும்பகோணம் மகாமகத்திற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளனர். அதை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் நினைவில் வைத்துக்கொண்டு கொண்டு வருவது இந்த மகாமகம். வரக்கூடிய பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே நடந்த நிகழ்வையும், கடந்த கால அனுபவங்களையும், கருத்தில் கொண்டு ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒரேநாளில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட வடமாநிலங்களில் நடந்த கும்பமேளாவில் ஒருவருக்கும் சிறு காயம் கூட இல்லாமல் அந்தந்த மாநில அரசு நடத்தியுள்ளது.

அதைவிட சிறப்பாக கும்பகோணம் மகாமகத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். எனவே, இதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா கட்சி நிலையாக கட்சியாக உருவெடுத்து வருகிறது. இனி வரும்காலங்களில் எந்த கூட்டணியும் இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக உருவாகி பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →