எந்த மொழி பேஸ்புக் தகவலையும் உங்கள் சொந்த மொழியில் படிக்கலாம். புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது பேஸ்புக் தளம்.
உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது.
இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதித்து வருகிறது. டெஸ்க்டாப்பில் பேஸ்புக் அப்ளிகேசனை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிங்கில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் நாம் விரும்பிய மொழியில் பேஸ்புக் பதிவுகளை படிக்கலாம். இதற்கு நமது பேஸ்புக்கின் அக்கவுண்ட் செட்டிங்கில் சென்று லாங்வேஜ்-யை கிளிக் செய்து அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக்கொள்ளலாம்.
இந்த வசதியை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.