முக்கியமான செய்தி இருக்கும் போது நீங்களே அறிந்து கொள்வீர்கள் –ரகுராம் ராஜன்
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நிறைவு அடைகிறது. அவர் மறுநியமனம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் யூகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையை, ரகுராம்ராஜன் நேற்று வெளியிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரது பதவி நீட்டிப்பு தொடர்பாக பத்திரிகையாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பாமல், “செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் பணக்கொள்கையை வெளியிடும் இடத்தில் இருப்பீர்களா?” என சூசகமாக கேட்டனர்.
அதற்கு அவர், “ எனது பதவி நீட்டிப்பு தொடர்பாக ஊடகங்கள் பல்வேறு யூக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களது சந்தோஷத்தை குலைப்பது என்னைப் பொறுத்தமட்டில் கொடுமையானது. அரசும், சம்மந்தப்பட்ட நபரும் பேசிய பிறகுதான் இதில் முடிவு எடுப்பது வழக்கம். அப்போது உங்களுக்கு அது தெரியவரும். நிதி மந்திரியும், பிரதமரும் இது தொடர்பாக கூறிய கருத்தைவிட நான் சிறப்பானதை உங்களுக்கு கூறி விட முடியாது” என பதில் அளித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.