Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

YouTube declares Rajinikanth’s Kabali the top trending trailer of 2016

By   /  December 9, 2016  /  Comments Off on YouTube declares Rajinikanth’s Kabali the top trending trailer of 2016

    Print       Email

mv5bmme4mdgwytmtztywnc00ytvjlwjjywqtztmwnjgwyjbmmgq4xkeyxkfqcgdeqxvynjc0mdkxnzk-_v1_ஐ-டியூன்ஸில் இந்திய அளவில் ‘கபாலி’க்கு முதலிடம்

ரஜினி நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான ‘கபாலி’ படத்தின் பாடல்கள் 2016-ம் ஆண்டு ஐ-டியூன்ஸில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

InCorpTaxAct
Suvidha

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகும் முன்பு, பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஜூன் மாதம் படத்தின் இசையும், ஜூலை 22-ல் படமும் வெளியானது.

ஐ-டியூன்ஸ் இணையதளம் என்பது உலக அளவில் பெரும் பிரசித்தி பெற்றது. ஐ-டியூன்ஸ் தளத்திலும் இப்பாடல்கள் வெளியானது. தற்போது 2016-ம் ஆண்டில் எந்த படத்தின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

அதில் இந்தியளவில் ‘கபாலி’ திரைப்படத்தின் பாடல்கள் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ’24’ ஆகிய படங்களின் பாடல்கள் 7-ம் மற்றும் 10-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘தெறி’ படத்தின் பாடல்களுக்கு 13-ம் இடம் கிடைத்திருக்கிறது.

ஐ-டியூன்ஸ் இணையதளம் வெளியிட்ட படங்களின் வரிசையில் ‘இருமுகன்’, ‘ரெமோ’, ‘நானும் ரவுடிதான்’, ‘இறுதி சுற்று’, ‘ஓ காதல் கண்மணி’, ‘தாரை தப்பட்டை’, ‘தனி ஒருவன்’, ‘தங்க மகன்’, ‘இறைவி’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதில் ஆச்சர்யமூட்டும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1992-ம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ மற்றும் 1995-ம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படமும் இடம்பெற்றிருக்கிறது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →